
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உதயநிதி தலைமையில் போராட்டம்
சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கை: தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஆக.20-ம் தேதி (இன்று) உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
ஆக.20-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm