நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்

திருச்சி:

அடுத்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு இறைவன் நாடினால் மலேசியாவில் நடைபெறும்.

இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் இதனை கூறினார்.

9ஆவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இம்மாநாட்டின் வெற்றியை கொண்டாடும் ஏற்பாட்டாளர்கள், இதில் உள்ள விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிறைகுறைகளை ஆராய வேண்டும்.

குறிப்பாக இம்மாநாடு வெறும் பாராட்டு விழாவாக இருக்கக் கூடாது. அதுவும் அவசியம் தான்.

ஆனால் தமிழையும் இலக்கியத்தையும் பாதுகாப்பதுடன் அதை வளர்ப்பதும் தான் இம்மாநாட்டின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் ம இ காவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்கள் அடுத்த மாநாட்டை மலேசியாவில் நடத்த வேண்டும் என பரிந்துரைத்தார்.

அவரின் பரிந்துரையை ஏற்று இங்கு வந்துள்ள மலேசியப் பேராளர்களின் ஆதரவுடன் மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்த மலேசியா தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset