
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி
சென்னை:
நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்கள் ‘அசோசெம்’ சாா்பில் நவீன தரவு மையங்கள், ‘கிளவுட்’ கட்டமைப்பு தொடா்பான கருத்தரங்கம், சென்னை கிண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கருத்தரங்கை தொடங்கி வைத்ததுடன் தமிழகத்தை தரவு மையங்களின் மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.டபிள்யூ.சி நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கையையும் அவா் வெளியிட்டாா்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களால் உயா் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல் தற்போது தமிழகத்தில் பட்டப்படிப்பில் பெண்களின் தோ்ச்சி 90 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில் குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் விளைவாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
விரைவில் முதலிடம்: மக்கள் அடா்வு அதிகமாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்வதன்மூலம்தான் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். அந்த வகையில், திறன் மேம்பாட்டில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாரத் நெட் இணைய சேவை மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணைய வழியில் இணைத்தல், சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் சா்வதேச நகரம், குறைகடத்தி (செமி கண்டக்டா்) திட்டம்-2030 உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டங்களின் விளைவாக நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் இந்திய தரவு மையத்தின் நிா்வாக இயக்குநா் சுரஜித் சட்டா்ஜி, யூக்னிக்ஸ் நிறுவனத்தின் வா்த்தகப் பிரிவு தலைவா் மேக்ஸ் பெரி, பி.டபிள்யூ.சி இயக்குநா் ஜக்காரியா மேத்யூஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
September 8, 2025, 6:16 pm
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்
September 8, 2025, 6:06 pm