நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ் நம்மை இணைக்கும்; இலக்கியம் நம்மை அணைக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முக ஸ்டாலின் பேச்சு

திருச்சி:

தமிழ் நம்மை இணைக்கும். இலக்கியம் நம்மை அணைக்கும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாடு திருச்சியில் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இம் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய முதல்வர்,

என் தந்தை காலத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானது.

இதன் அடிப்படையில் தான் நான் இந்த மாநாட்டிற்கு தலைமையேற்றுள்ளேன்.

இம் மாநாட்டில் உலக நாட்களில் இருந்து பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது தான் இம் மாநாட்டின் வெற்றியாகும்.

தமிழ் நம்மை இணைக்கும். இலக்கியம் நம்மை அணைக்கும்.  இதனை யாராலும் மறுக்க முடியாது.

இதுபோன்ற மாநாடுகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு தரும் என்று அவர் கூறினார்.

தமிழ் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை மக்களின் நலனிலும் மேம்பாட்டிலும் தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அக் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கேஎம் காதர் மொகிதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்துல் றவூப் ஹக்கிம் உட்பட ஆயிரக்கணக்கானோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset