நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்

திருச்சி:

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளும் பயங்கரவாதம் தான். இதற்கு யார் முடிவு கட்டப் போவது.

தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் இக்கேள்வியை முன்வைத்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது நாளான இன்று நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர்,

இஸ்லாமிய இலக்கியம் என்பது
தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டது.

இதனால் இஸ்லாத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது.

அதே வேளையில் இஸ்லாம் என்றால்  சகோதரத்துவம் என்று பொருள்.

இந்த சகோதர்த்வத்தை முன்னுரிமையாக கொண்டிருக்கும் மார்க்கமான இஸ்லாம் பயங்கரவாதத்தை எப்படி ஆதரிக்கும்?

இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.

ஏன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களும் அதே கொள்கையுடன் தான் உள்ளனர்.

அதே வேளையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து கொண்டு தான் உள்ளது.

ஒரு சில கும்பல் செய்வது பயங்கரவாதம் என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளும் பயங்கரவாதம் தான்.

ஆக அனைத்து மக்களுக்கும் எதிரான வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset