
செய்திகள் தமிழ் தொடர்புகள்
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
திருச்சி:
தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாறுகள் ஒருபோதும் மறைக்கப்படக் கூடாது. அதற்கு நாம் அனுமதிக்கவும் கூடாது.
தமிழ்நாட்டின் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்எச் ஜவாஹிருல்லா இதனை கூறினார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான இன்று நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர்,
இஸ்லாம் வன்முறையும் போரையும் போதித்தது இல்லை. இஸ்லாம் பற்றி தெரியாதவர்கள் அப்படி சொல்வார்கள்.
உண்மையில் இஸ்லாம் அன்பையும் பாசத்தையும் ஒழுக்க நெறியையும் போதிக்கிறது.
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்படும் முஸ்லிம்களின் வரலாறுகள் மறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.
ஏன் இந்தியாவின் மத்திய அரசு அரசு அமல்படுத்த துடிக்கும் புதிய கல்வி கொள்கையில் இம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
நாமும் அதற்கு துணை நிற்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm