
செய்திகள் தமிழ் தொடர்புகள்
டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு இலக்கியப் புரவலர் விருது: உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவிப்பு
திருச்சி:
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கிட்டத்தட்ட 9 பேருக்கு இலக்கியப் புரவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.
இம் மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக இலக்கியப் புரவலர் விருது வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது.
இதில் இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால், எச்ஆர்டி கோர்ப் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் ஆகியோர் விருது பெற்றவர்களில் முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து பலருக்கு இலக்கியச் சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm