நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்திய முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார். 

வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். 

ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க.வினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ராஜகண்ணப்பன், தி.மு.க. எம்.பி.கனிமொழி ஆகியோர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

அதன்பின்னர் அப்துல்கலாம் நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

இந்த நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை, "வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை" என்ற அப்துல் கலாமின் பொன்மொழியை பகிர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset