செய்திகள் தொழில்நுட்பம்
சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் புதிய புகைப்படம் இஸ்ரோ வெளியிட்டது
சென்னை:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பயணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.
திட்டமிட்டபடி 40 நாட்கள் பயணத்துக்கு பிறகு வருகிற 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று லேண்டர் பிரியும் நிகழ்வையும், 23-ஆம் தேதி நிலவில் விண்கலம் தரையிறங்குவதையும் இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
இன்று காலை 8.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
லேண்டர் கேமரா மூலம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
புகைப்படம் எடுத்திருப்பதன் மூலம் லேண்டரில் உள்ள கேமரா சோதனையும் முடிந்துள்ளது. லேண்டரில் உள்ள கிடைமட்ட வேக கேமரா மூலம் நிலவின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
June 3, 2026, 3:44 pm
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
April 24, 2026, 4:18 pm
ஏஐ-க்காக மெட்டாவின் மெகா பிளான்: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு
April 23, 2026, 12:09 pm
வரலாறு படைக்கும் பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள்: சீனா வழங்கும் பிரத்யேகப் பயிற்சி
April 20, 2026, 11:18 am
