நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் சிரமம்: தரிசன கட்டணம் செலுத்த டெபிட், கிரெடிட் கார்டு அனுமதி வழங்கப்படுமா?

மதுரை: 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத் துவதற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வசதியில் லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழ கத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமானோர் தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கட்டணமில்லா தரிசனத்துக்கு 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.

ரூ.50 கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கோயிலின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக் கப்படுகின்றனர். மொபைல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் கட்டணம் செலுத்த முடிய வில்லை. கடந்த காலங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதில் பல குளறுபடிகள் ஏற்பட்டதால் அந்த வசதி ரத்து செய்யப் பட்டது. பணம் செலுத்திதான் கட்டண அனுமதி சீட்டை பெற முடியும் என்பதால், சரியான சில்லறை கொண்டு வராத பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த சென்னையைச் சேர்ந்த சங்கரமூர்த்தி கூறியதாவது: குடும்பத்தினருடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தேன். கட்டண அனுமதிச் சீட்டு பெற என்னிடம் சில்ல றையாக பணம் இல்லை. தரிசன டிக்கெட் கவுன்ட்டரில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியில்லை. இத னால் சிரமப்பட்டேன். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியை கோயில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பாக கோயில் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘முன்பு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்த போது, அதில் பணம் வரவு வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அதை நிறுத்திவிட்டோம். எனினும், மீண்டும் அவ்வசதியை கொண்டு வருவது தொடர்பாக முயற்சி மேற் கொள்ளப்படும்’ என்று கூறினார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset