நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நீட் தேர்வு கொடுமையால் தந்தை மகன் இருவரும் பலியானதற்கு பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும்; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்: ஜவாஹிருல்லாஹ் 

சென்னை:

சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் எனும் மாணவர் மருத்துவம் படிக்கவிருப்பப்பட்டு , 2 முறை நீட் தேர்வு எழுத 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும்இதன் பிறகு வெற்றி பெறாத நிலையில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதப் பயிற்சிமையத்தில் சேர்ந்தவர், அடுத்த நாளில், திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் கூறினார். 

மாணவரின் இறப்புக்குப் பின் பேட்டியளித்த அவரது தந்தை செல்வம், நீட் தேர்வை ரத்துசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.

மனைவி இல்லாத நிலையில், வாழ்க்கையின் ஒற்றை நம்பிக்கையாக இருந்த மகனையும்இழந்த செல்வம் தனியாகத் தவித்து வந்தார்.மனமுடைந்த காணப்பட்ட அவர், தனது மகன்இறந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வ சேகர் ஆகிய இருவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்காமலேயே நீட் தேர்வில் நிறையப் பேர் தேர்ச்சிபெற்றதைப் பார்க்கிறேன்.நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டிப்போடும் திறனைக் குறைத்து விடும், நீட் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்’ 

என்றெல்லாம் தமிழ்நாட்டின் ஆளுநர் பேசிய சில நாட்களில் இவர்களின் மரணம்நிகழ்ந்திருப்பது நீட் தேர்வின் கோர முகத்தை இந்திய மக்களுக்கு எடுத்துரைத்து இருக்கிறது. 

இம்மரணங்களுக்கு மாநில அரசின் உரிமைகளைப் பறித்து வரும் ஒன்றிய பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பயிற்சி மையங்களில் செலவழித்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதுபவர்களேவெற்றி பெற முடியும் என்பதே எதார்த்த கள நிலவரம் ஆக இருக்கிறது. 

பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி மீண்டும் மாநில பட்டியலில் இடம் பெற வேண்டும். மருத்துவம் பொருளாதாரம் நிரம்பியவர்களுக்கு மட்டுமே என்கிற நிலை மாற வேண்டும். அதற்கான சரியான முன்னெடுப்புகளைத் தமிழக அரசு இன்னும் தீவிரப் படுத்த வேண்டும். இதற்கு மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். 

இந்த இருவரின் மரணமே நீட் தேர்வினால் பாதிக்கப்படுபவர்களின் இறுதி மரணமாகஇருக்கட்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள் பெற்றோர்கள் அவர்களுக்குஆதரவாகவும் ஆறுதலாகவும் இருங்கள்.

சர்வாதிகாரியாகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர் என் ரவியைக் கண்டித்து சுதந்திரதினத்தை முன்னிட்டு அளிக்கும் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சிபுறக்கணிக்கும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset