நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீரென நெஞ்சு வலி: பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி 

பெங்களூரு: 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துகொண்டு கிருஷ்ணகிரியில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றார். 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை நெருங்கியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக காரிமங்கலத்தில் ராமசாமி கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தினர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணம் மற்றும் வாயு பிரச்சினை இருந்தது தெரியவந்தது.

அதற்காக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய அமைச்சர், மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி பெங்களூரு இருதயவியல் சிறப்பு மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இருதய சிகிச்சை மருத்துவர்கள் அன்பில் மகேஸுக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset