நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமை: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

புது டெல்லி:  

கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து இந்திய அரசுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.

நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட 2 பெண்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு, இரு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 14 நாள்களுக்குப் பிறகே காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

அவ்விரு பெண்களையும் காவல் துறையினரே போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தகைய சூழலில், இது தொடர்பான வழக்கை மாநில காவல் துறையினர் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது.

அதை விசாரிக்க முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

இதுதொடர்பாக 6000 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இதில் எத்தனை பெண்கள் தொடர்பானது, எத்தனை வெற்றானது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறி செவ்வாய்க்கிழமையும் விசாரணையை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும்,மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட சிறப்புக் குழு மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கோரிய பிறகு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset