நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிந்து பரிஷத்தினருக்கும் உள்ளூர் இளைஞர்களுக்கும் கடுமையான மோதல்; 3 பேர் பலி: ஊரடங்கு அமல் 

நூஹ்: 

ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபரிதாபாத் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் ஆகியனவற்றிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

144 தடை, இணையதள முடக்கம்: 
 

ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூஹ். இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. 

Haryana Riots: Khattar Claims that Prior Evacuation Could Have Also  Resulted in Violence

இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழுவுடன் விஸ்வ ஹிந்து பர்ஷத்தினர் கடுமையாக மோதினர். 

தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இருந்த உள்ளூர் இளைஞர்களுக்கும் ஊர்வலத்தினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. உடனடியாக போலீஸுக்கு தகவல் கிடைக்க போலீஸார் அங்கு குவிந்தனர். 

கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset