நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா-மலேசியாவின் 10-வது ராணுவ ஒத்துழைப்பு கூட்டம்

புது டெல்லி:

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்புக்கான துணைக் குழுவின் 10வது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுதொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியப் பிரதிநிதிகள் குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) அமிதாப் பிரசாத் தலைமை தாங்கினார். 

மலேசியத் தரப்புக்கு பாதுகாப்புச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சிப் பிரிவின் உதவித் தலைவர் மேஜர் ஜெனரல் டத்தோ கைருல் அனுவார் பின் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பரிசீலனை செய்யப்பட்டதுடன், பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.

இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான பயனுள்ள மற்றும் நடைமுறை முயற்சிகளை இரு தரப்பும் ஆராய்ந்தன.

India, Malaysia hold 10th meeting of sub committee on military cooperation

இந்தியத் தரப்பு அதன் கப்பல் கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் திட்டங்களில் மலேசிய ஆயுதப் படைகளுடன் ஒத்துழைக்கும் திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தன.

இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் பாதுகாப்பு செயலர் மட்டத்தில் நடைபெறும் 12வது மலேசியா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு (மிட்காம்) கூட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து இரு இணைத் தலைவர்களும் ஆலோசித்தனர் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

2015 இல் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசியப் பயணத்தின் போது இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset