நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள 11 பெண் தொழிலாளர்களுக்கு ரூ. 10 கோடி லாட்டரி பரிசு

மலப்புரம்:

கேரளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரிக்கும் கிடங்கில் பணிபுரியம் 11 பெண் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கேரளத்தின் பரப்பனங்காடி நகராட்சி கிடங்கில் பணியாற்றும் 11 பெண் தொழிலாளர்கள் அண்மையில் கூட்டாக இணைந்து அந்த மாநில லாட்டரிச் சீட்டை ரூ. 250க்கு பங்குப் போட்டு வாங்கினர். குலுக்கலில் அவர்கள் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுந்துள்ளதாக கேரள லாட்டரித் துறை அறிவித்துள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லாட்டரியில் பரிசு பெற்றுள்ள பெண் தொழிலாளர்களைச் சந்திக்க ஏராளமானோர் நகராட்சிக் கிடங்குக்கு வியாழக்கிழமை சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக 11 பெண் தொழிலாளர்களில் ஒருவரான ராதா கூறுகையில் "எங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்ற தகவலை அறிந்ததும் எங்களின் உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லாமல் போனது. நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது கிடைத்துள்ள பணம் எங்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியாக இருக்கும்' என்றார்.

கடந்த ஆண்டும் அவர்கள் கூட்டாக ரூ. 250 திரட்டி ஓணம் பம்பர் லாட்டரிச் சீட்டை வாங்கினார்கள். அதில் ரூ. 7,500 பரிசு விழுந்தது. அதை அவர்கள் சரிசமாகப் பிரித்துக் கொண்டார்கள்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset