நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களிலும் இந்தியா: பிரதமர் மோடியே கூறியதால் சர்ச்சை

புது டெல்லி:

இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களில் கூட "இந்தியா' என்ற சொல் இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகளின் "இந்தியா' கூட்டணியைப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடியே இந்தியா பெயரை அவதூறு செய்யும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய அளவில் "இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கோரியும் "இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ளன.

இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளின் பெயர்களில் கூட "இந்தியா' என்ற சொல் காணப்படுகிறது.

எதிர்க்கட்சியின் பெயரான "இந்திய தேசிய காங்கிரஸ்' என்பதையே, பிரிட்டிஷ்காரரான ஏ.ஓ.ஹியூம் என்பவர்தான் சூட்டியதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

நாட்டின் பெயரைப் பயன்படுத்தி, நாட்டு மக்களை எதிர்க்கட்சிகளால் தவறாக வழிநடத்த முடியாது என்றார்.

எதிர்க்கட்சிகளின் "இந்தியா' கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளதாகக் கூறியுள்ள காங்கிரஸ், அக்கூட்டணியானது ஒட்டுமொத்த நாட்டுக்கே வழிகாட்டும் என்றும் பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset