நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் - வெளியானது அடுத்த வீடியோ: பாதுகாப்புப் படை வீரர் பணியிடைநீக்கம்

புது டெல்லி:

வன்முறை நடைபெற்று வரும் மணிப்பூரில் சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் நிர்வாணமாக பழங்குடி பெண்களை மைதேயி சமூக ஆண்கள் இழுத்துச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தற்போது அடுத்த விடியோ வெளியாகி உள்ளது. அரசுக்கு இதுபோன்ற நெருக்கடிகளை அளிப்பதைத் தடுக்கவே அங்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த இந்திய ராணுவம் மற்றும், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், பிஎஸ்எஃப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மணிப்பூரிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண் ஒருவரை, துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியிலிருந்த பிஎஸ்எஃப் தலைமைக் காவலர் சதீஷ் பிரசாத் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இம்பாலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset