நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்தியா இலங்கை இடையேயான படகு போக்குவரத்து தாமதம்

 கொழும்பு:

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுகத்தை இந்திய அரசு மாற்றியதால் அச்சேவை நடைமுறைக்கு வருவதில் மேலும் தாமதமாகும் என இலங்கை கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிரிபலா டி சில்வா தெரிவித்தார்.

புதுச்சேரியில் அமைந்துள்ள காரைக்கால் துறைமுகத்திலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காங்கேசன்துரை துறைமுகத்துக்கு இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

காரைக்கால் துறைமுகத்துக்குப் பதிலாக தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் படகுச் சேவைக்காகப் பயன்படுத்த இந்திய அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து, அத்துறைமுகத்தில் வேண்டிய வசதிகளை மேலும் மேம்படுத்த இந்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. இதனால் இந்தியா-லங்கை இடையேயான  படகு சேவை நடைமுறைக்கு வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset