நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து கடத்தி செல்லப்பட்ட ஆமைக் குஞ்சுகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி :

மலேசியாவிலிருந்து கடத்திக் கொண்டு செல்லப்பட்ட  6,850 ஆமைக் குஞ்சுகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளைக் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வழக்கம். இது போன்ற கடத்தல் சம்பவங்களை முறியடிக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூன் 24-ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த முகமது அசார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹபீஸ்நஸ்தார் ஆகிய இரு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அரிய வகை ஆமை குஞ்சுகள் இருந்தன. இதனையடுத்து அவ்விருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 6850 ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். 

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.51 ஆயிரத்து 441 மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன. 

வனத்துறையினரும் பறிமுதல் செய்யப்பட்ட ஆமைக் குஞ்சுகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

- அஷ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset