நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லெபனானில் வங்கிகள் சூறையாடல்: பணத்தை திருப்பிக் கேட்டு மக்கள் போராட்டம் 

லெபனான்:

மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலவுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் நிலவுவதால், இதனை எதிர்த்து பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பல வங்கி கட்டிடங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். 

வங்கிகளுக்கு முன்பாக பெரிய டயர்களை கொளுத்தியும், வங்கி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் எதிர்ப்புகளை காட்டி வருகிறார்கள். தலைநகர் பெய்ரூட்டிற்கு வெளியே ஆடி வங்கி, பெய்ரூட் வங்கி, மற்றும் மவுண்ட் லெபனான் சின் எல்-ஃபில்.ல் உள்ள பிப்லோச் வங்கி ஆகியவற்றுக்கெதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. 

பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் என்றும் கூறினர்.

ஆதாரம்: Al Jazeera

தொடர்புடைய செய்திகள்

+ - reset