நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களை அனுப்பிய சீனா

பெய்ஜிங் :

விண்வெளித்துறையில் சாதனை படைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் போட்டி போட்டு வருகின்றது.

அதன்படி சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங் யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கியிருந்த சீன விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாகப் பூமிக்கு திரும்பினர். 

இந்தநிலையில் நேற்று சீனாவின் தைவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2டி என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த ராக்கெட் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 

இந்த செயற்கைக்கோள்கள் வணிக தொலையுணர் சேவைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை சரிபார்க்க பயன்படுத்தப்படும் எனச் சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset