நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் 48 மணி நேரத்தில் 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்த சோகம்

சென்னை:  

தமிழகத்தில் 48 மணி நேரத்தில் 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்த சோக சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் (24),  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவர் தனுஷ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் விஜய் சுரேஷ் கண்ணா (38) என்ற உதவிப் பேராசிரியர், திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ் குமார் மருத்துவக் கல்லூரியின் காது-மூக்கு- (46), சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் கௌரவ் காந்தி (41) ஆகியோர் தங்களது பணியிடங்களிலேயே திடீரென உயிரிழந்தனர்.

இளம் வயதில் உள்ள அவர்கள் அனைவரும் இதய செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்புக்குள்ளாகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது மருத்துவத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய நலவாழ்வு திட்ட விபத்து காய சிகிச்சை ஒருங்கிணைப்பு அதிகாரியும், முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் விஸ்வநாத் கூறுகையில், தற்போதைய மருத்துவ உலகில் இருவேறு வகை நிர்ப்பந்தத்தின் கீழ் மருத்துவர்கள் ஓய்வின்றி பணிபுரிகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் கட்டாயத்தின் பேரில் தொடர்ந்து பணியாற்றுவது ஒரு வகை. பணம், பெயர், புகழ் ஈட்டுவதற்காக தொடர்ச்சியாக பணியாற்றுவது மற்றொரு வகை.
நாளொன்றுக்கு குறைந்தது 14 மணி நேரம் அவ்வாறு பணியாற்றுவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலருக்கு சராசரியாக நிமிஷத்துக்கு 90-ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பு அளவு 150-க்கும் மேல் உள்ளது.

பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதே இல்லை.

இதன் காரணமாகவே மருத்துவர்கள் எதிர்பாராமல் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் தற்போது
உயிரிழந்த மருத்துவர்களுக்கும் புகைப்பழக்கமோ, வேறெந்த பழக்கமோ இல்லை.  மிக ஆரோக்கியமாக கட்டுக்கோப்புடனும் இருந்தவர்கள். 

அவர்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவது மற்றொரு வகை.

நாளொன்றுக்கு குறைந்தது 14 மணி நேரம் அவ்வாறு பணியாற்றுவதால் மன அழுத்தம்
அதிகரிக்கிறது.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலருக்கு சராசரியாக நிமிஷத்துக்கு 90-ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பு அளவு 150-க்கும் மேல் உள்ளது.

பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதே இல்லை.

இதன் காரணமாகவே மருத்துவர்கள் எதிர்பாராமல் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் தற்போது உயிரிழந்த நான்கு மருத்துவர்களுக்கும் புகைப்பழக்கமோ, மதுப் பழக்கமோ இல்லை. மிக ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடனும் இருந்தவர்கள். அவர்கள்
திடீரென இறந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

நன்றி: தினமணி

தொடர்புடைய செய்திகள்

+ - reset