நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் சவூதி தூதரகம் மீண்டும் திறப்பு

ரியாத்:

சவூதி அரேபியாவில் ஏழு ஆண்டுகளுக்குப்  பிறகு ஈரான் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சன்னி முஸ்லிம் பிரிவினரை அதிகம் கொண்ட சவூதி அரேபியாவுக்கும், ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது.

இந்நிலையில், சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல்நிமர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானிலும், மாஷாத் என்ற மற்றொரு நகரிலும்  2016இல் சவூதி தூதரகங்கள் தாக்கப்பட்டன.

அதனைக் கண்டித்து ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா முறித்துக் கொண்டது. ஈரானும் சவூதி தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.

இந்நிலையில், சீனா மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் விளைவாக மீண்டும் தூதரக உறவை புதுப்பித்துக்கொள்ள ஈரானும், சவூதி அரேபியாவும் சம்மதித்தன. இந்த நிலையில் சவூதி அரேபிய தலைநகர் ரியாதில் தனது தூதரகத்தை ஈரான் திறக்கிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset