நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹஜ்ஜு பெருநாளுக்கு நீண்ட விடுமுறைகள்

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள்  ஹஜ்ஜுப்பெருநாளாம் ஈத் அல் அதாவை முன்னிட்டு இந்த மாதம் தங்கள் மிக நீண்ட விடுமுறையை அனுபவிக்க தயாராகி உள்ளார்கள்.

அமீரக விடுமுறை பட்டியலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டில் ஈத் அல் அதா, ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய புத்தாண்டு மற்றும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் ஆகிய மூன்று சிறப்பு நாட்களை முன்னிட்டு, நாட்டில் உள்ள ஊழியர்கள் மூன்று நீண்ட விடுமுறைகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை வார இறுதி நாள் உட்பட ஈத் அல் அதா கொண்டாடப்படும் என்று கூறப்படுகிறது. 

What and when is Eid Al Adha in the UAE?

எனவே, குடியிருப்பாளர்கள் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஆறு நாள் விடுமுறையை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது பிறை பார்ப்பதன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வரும் நீண்ட விடுமுறை ஹிஜ்ரி புத்தாண்டின் போது மூன்று நாட்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. புதிய இஸ்லாமிய ஆண்டைக் கொண்டாடும் வகையில், ஜூலை 21 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதாவது ஊழியர்களுக்கு இரண்டு நாள் வார விடுமுறை அதாவது சனி, ஞாயிற்றுக் கிழமையினை சேர்த்தால் மூன்று நாள் விடுமுறை அதிகப்படியாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset