செய்திகள் மலேசியா
பேரா சிம்மோரில் நால்வர் போற்றி விழா
சிம்மோர்:
ஈப்போ இந்து சங்கம் ஏற்பாட்டில் சிம்மோர் தேவிஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அதன் ஆலய நிர்வாகத்தின் பேராதரவுடன் இவ்விழா சிறப்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சத்தியசீலா தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிளேபாங் தமிழ்ப்பள்ளி , ஸ்ரீ அங்காலம்மாள் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா எல்லை காளியம்மன் ஆலயத்தை பிரதிநிதித்து சுமார் 85 மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் திருமுறை, தோரணம் கட்டுதல், பக்தி பாடல், மாறுவேடம், கோலம் போடுதல் ஆகிய போட்டியும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வை பேரா மாநில இந்து சங்கத் தலைவர் சுந்தரசேகரன் தொடக்கி வைத்தார்.
இதில் அவர் ஆற்றிய உரையில், மாணவர்கள் சமயத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து சமய ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தவேண்டும் என்று இந்து சமய சார்புடைய அமைப்புகளை கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் மற்றும் இளையோர்கள் சமயத்தின் மீது ஈடுபாடு காட்ட பெற்றோர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.
ஈப்போ இந்து சங்கத்தின் ஆலோசகர் ந. சுந்தரராஜூ ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஈப்போ இந்து சங்கத் தலைவர் து. இளவரசி நன்றியை கூறிக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
இதுபோன்ற நிகழ்வுகள் ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் என்று இளவரசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனத்தை துவாங்கு முஹ்ரிஸ் உடனடியாக ரத்து செய்தார்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
