நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வவாசான், பெஜுவாங் கட்சிகள் தேசியக் கூட்டணியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன

கோலாலம்பூர்:

வவாசான், பெஜூவாங் ஆகிய கட்சிகள் உறுப்பு கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசியக் கூட்டணி அறிவித்தது.

தேசியக் கூட்டணி தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் இதனை கூறினார்.

பாஸ், பெர்சத்து, கெராக்கான், எம்ஐபிபி  ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட தேசியக் கூட்டணி உச்சமன்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.

இரண்டு மணி நேரம் நீடித்த பாஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு,

புதிய தேசியக் கூட்டணி உறுப்பினர் கட்சிகளாக இரு கட்சிகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க கூட்டம் ஒப்புக்கொண்டது என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தேசியக் கூட்டணியில் இணைவதற்கான விண்ணப்பம் நேற்று இரவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்ட்டி சிந்தா மலேசியா, முன்னாள் பெர்சத்து துணைத் தலைவர் ஹம்சா ஜைனுசடின், அவரது ஆதரவாளர்களால் கையகப்படுத்தப்பட்ட பின்னர் வவாசான் என மறுபெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset