செய்திகள் மலேசியா
ஈப்போவில் பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்ததில் முதலாம் படிவ மாணவர் படுகாயம்
ஈப்போ:
நேற்று மாலை இங்குள்ள ஒரு இடைநிலைப் பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்ததாகக் கருதப்படும் முதலாம் படிவ மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பேரா போலிஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் இதனை கூறினார்.
பிற்பகல் 2.49 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் தமது துறைக்குக் கிடைத்தது.
அதன்பின்னர் போலிசார், மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை, போலிசார் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைச் சேகரித்து வருவதுடன், தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.
போலிசார் ஒரு வெளிப்படையான, விரிவான விசாரணையையும் நடத்துவார்கள்.
மேலும் இதுகுறித்த மேலதிக முன்னேற்றங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 10:46 am
கூலாயில் கோர விபத்து: 4 லாரிகள், 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன
June 23, 2026, 10:00 am
வருமானத்தைத் தாண்டி வாழ்க்கைச் செலவையும் கணக்கிடும் புதிய அரசு திட்டம்
June 23, 2026, 9:58 am
சௌஜானாவில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளர் மரணம்: ஸ்பான் முழு விசாரணையை நடத்துகிறது
June 23, 2026, 9:09 am
வவாசான், பெஜுவாங் கட்சிகள் தேசியக் கூட்டணியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன
June 23, 2026, 9:08 am
ஜொகூர் தேர்தல்: தேசியக் கூட்டணி இன்று தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கும்: சம்சுரி
June 22, 2026, 11:10 pm
