நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சௌஜானாவில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளர் மரணம்: ஸ்பான் முழு விசாரணையை நடத்துகிறது

கோலாலம்பூர்:

கடந்த ஜூன் 16 அன்று கோல சிலாங்கூரில் உள்ள சௌஜானாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி பராமரிப்புப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பந்தப்பட்ட உயிரிழப்பு விபத்து குறித்து தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.

செயல்முறைகளில் ஏதேனும் சிக்கல்கள் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர், அதாவது இயக்குபவர், ஆயர் சிலாங்கூர் அல்லது ஸ்பான் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்பான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு நீர் சேவைகள் தொழில் சட்டம், அதன் கீழ் உள்ள தொடர்புடைய துணைச் சட்டங்கள் மீறப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்பானின் ஆய்வின்படி, துப்புரவு அல்லது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், ஸ்பானில் பதிவு செய்யப்பட்ட அனுமதியைக் கொண்டிருந்தார்.

ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், மூடிய இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததற்கான சாத்தியக்கூறு உள்ளது.

இதில், தொழிலாளர்கள் அனுமதியின்றியும், பாதுகாப்பு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பும் நுழைந்ததும் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset