நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் தேர்தல்: தேசியக் கூட்டணி இன்று தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கும்: சம்சுரி

கோலாலம்பூர்:

ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான தேசியக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு, இன்று நடைபெறும் ஒரு சிறப்புக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி நோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் இதனை கூறினார்.

இந்த விவாதத்தை தேசியக் கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் ஒருங்கிணைப்பார்.

ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பும்.

தொகுதிப் பங்கீடு உடனடியாகச் செய்யப்படும் என்று கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டு, கூட்ட உறுப்பினர்களின் ஒப்புதலையும் பெறப்படும்.

வரும் சனிக்கிழமை ஜொகூரில் வேட்பாளர் நியமனத்தை எதிர்கொள்வதற்கு முன்பு, இன்று நாங்கள் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்துவோம்.

அதில் தொகுதிப் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்படும்.

மேலும் தேசியக் கூட்டணியின் இரண்டு புதிய உறுப்புக் கட்சிகளான பெஜூவாங்,  பார்ட்டி சிந்தா மலேசியா ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்று அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset