நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதப் பிரச்சினைகளை ஒரு விவாதமாகவோ, அரசியல் சர்ச்சையாகவோ ஆக்காதீர்கள்: மாமன்னர்

கோலாலம்பூர்:

மதப் பிரச்சினைகளை ஒரு விவாதமாகவோ, அரசியல் சர்ச்சையாகவோ ஆக்காதீர்கள் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் உத்தரவிட்டார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 3ஆவது பிரிவின் படி இஸ்லாத்தின் கூட்டாட்சி மதம் என்ற நிலைப்பாட்டையும்,  மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டையும் அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும்.

அதே வேளையில் மற்ற மதங்களை அமைதியாகப் பின்பற்றலாம். 

பன்மைத்துவத்தில் மலேசியர்களின் முழு சகிப்புத்தன்மையும் உண்மையில் நாட்டின் முக்கிய பலத்தின் அடிப்படையாகும்.

எனவே வலிமையான, வெற்றிகரமான, கண்ணியமான ஒரு தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் பிரிவினையை தூக்கி  எறிய வேண்டும்.

நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த ஒன்றிணைய வேண்டும் என்று தமது 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  வழங்கிய உரையில் மாமன்னர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset