நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது: பிரதமர்

கோலாலம்பூர்: 

சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை சீர்குலைக்கு நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீனின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அரண்மனையில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உரையாற்றினார். அவர் கூறியதாவது,

இந்த நாட்டில் சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சி கேலி செய்யப்படுவதையும் துஷ்பிரயோகம் செய்வதையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது, அனுமதிக்காது.

அதன் அடிப்படையில் அரசிலமைப்பு, அரசிலமைப்புச் சட்டத்தின் மகத்துவத்தை அச்சுறுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் அரசாங்கம் எந்தவொரு பாராபட்சமும் பார்க்காது என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset