நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர், மலேசிய நில எல்லைகளைக் கடந்தவர்கள் ஆக அதிகம்

சிங்கப்பூர்:

சுமார் 250,000 பயணிகள் உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளின் வழியாக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு சென்றுள்ளதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

நீண்ட வாரயிறுதி காரணமாகவும் ஜூன் பள்ளி விடுமுறையின் காரணமாகவும் எல்லைகள் திறக்கப்பட்டதிலிருந்து ஆக அதிகமானோர் நேற்று பயணம் மேற்கொண்டதாக அது சொன்னது.
விளம்பரம்

அடுத்த சில நாட்களில் சிங்கப்பூருக்குத் திரும்பவிருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குடிநுழைவு, சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

குடிநுழைவு நடவடிக்கைகளுக்கான கூடுதல் நேரத்தையும் பயணிகள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று ஆணையம் கூறியது.

ஓட்டுநர்கள் மாற்று வழிகளில் பயணம் மேற்கொள்ளுமாறு அது கேட்டுக்கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset