நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நெஞ்சை நெகிழச் செய்த படம்! - வெள்ளிச் சிந்தனை

அல்லாமா யூசுப் கர்ளாவி அவர்களின் அலுவலக அறையின் இந்தப் படம் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கின்றது. 

மேஜையில் வைக்கப்பட்டிருக்கின்ற கனத்த தொகுதிகள் - அல் அஃமால் அல் காமிலா என்கிற பெயரில் அச்சாகியிருக்கின்ற கனத்த நூல்கள் என்ன தெரியுமா?

அல்லாமா யூசுப் கர்ளாவி அவர்க்ள் தம்முடைய வாழ்நாளில் எழுதிய ஒட்டுமொத்த நூல்களின் தொகுப்புதான் இப்படி 105 கனத்த தொகுதிகளாக அச்சாகி இருக்கின்றன. 

கடந்த பல ஆண்டுகளாக இந்தத் தொகுதிகளுக்கான தயாரிப்பு நடந்து வந்தது. இப்போது அல்லாமா அவர்கள் இறைவனிடம் மீண்டுவிட்ட பிறகு அச்சாகி வெளியாகி இருக்க அவற்றை அவருடைய அலுவலக அறையில் மேஜை மீது வைத்து அழகு பார்த்திருக்கின்றார்கள். 

முப்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு படத்தை சௌத்ரி அலீ அஹ்மத் என்கிற இஸ்லாமிய இயக்க முன்னோடியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலில் பார்த்ததும் படித்ததும் மனத்தில் எட்டிப் பார்க்கின்றது.

சௌத்ரி அலீ அஹ்மத் இறைவழியில் இறைவனின் உவப்பைப் பெறுவதற்காக தம்முடைய உடல், உயிர், உடைமை என்று அத்தனையையும் அர்ப்பணித்தவர். போலீஸ் வேலையை உதறித் தள்ளிவிட்டு பரோட்ட கடை நடத்திய சமூகப் போராளி.

அவர் இறைவனிடம் மீண்டுவிட்ட பிறகு அவரைப் பற்றிய விவரங்களை, நண்பர்கள், உறவினர்கள், தோழர்களின் அனுபவங்களை, தாக்கங்களை, அவர் ஏற்படுத்திய மலர்ச்சிகளை, விட்டுச் சென்ற தடங்களை எல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்தார்கள். 

அந்த நூலில் கருப்பு வெள்ளை படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள். ஏராளமான புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, அந்தப் படத்தின் கீழ் ‘ஆத்மி சலா கயா. கிதாபே ரஹ் கயீ - மனிதன் சென்றுவிட்டார். புத்தகங்கள் எஞ்சி நிற்கின்றன’ என்று ஒற்றை வரி எழுதப்பட்டிருக்கும். 

நெஞ்சை அதிரச் செய்த வாசகங்கள் அவை. மனத்துக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சிய வாசகங்கள். 

இந்த உலகில் எதுவுமே நிலையானதல்ல. எல்லாமே ஒரு நாள் முடிந்து போகும். எல்லாமே ஒரு நாள் இல்லாமல் போகும். .

அதனால் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் உரத்து முழங்கினார்கள். ‘லா உஹிப்புல் ஆஃபிலீன் - மறைகின்றவற்றை நேசிப்பவன் நான் அல்லன்

அல்லாஹ் அருள் செய்வானாக. ஆமீன்.

- லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset