
செய்திகள் சிந்தனைகள்
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
"மனிதர்களிடம் நல்லவற்றையே பேசுங்கள்'' (திருக்குர்ஆன் 2:83)
'நல்ல வார்த்தையும் ஒரு தர்மமே' என்று வீணாகச் சொல்லப்படவில்லை.
காரணம், நல்ல வார்த்தைகள் பாதைகளைத் திறக்கும். உயிர்களுக்கு உற்சாகம் கொடுக்கும். நல்ல எண்ணங்களை உருவாக்கும்.
"யா அல்லாஹ்! இரண்டு உமர்களில் யாரை நீ அதிகம் நேசிக்கிறாயோ அவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்துவாயாக!'' என்று நபிகளார் கூறினார்கள்.
இந்த வார்த்தைகள் உமர் (ரலி) அவர்களின் இதயத்தில் நுழைந்தன. ஃபாரூக் எனும் மாபெரும் ஆட்சியாளர் கிடைத்தார்.
"காலித் மட்டும் நம்மிடம் வந்தால் அனைவரை விடவும் அவரை நாம் முற்படுத்துவோம்'' என்று நபிகளார் கூறினார்கள். இந்த வார்த்தைகள் காலித் பின் வலீதின் காதுகளில் விழுந்தன.
'அல்லாஹ்வின் உருவப்பட்ட வாள்' என்ற மாபெரும் தளபதி தோன்றினார்.
“இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் உறுதுணையாக இருப்பார்'' என்று நபிகளார் கூறினார்கள்.
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) எனும் கவிக்கோ தோன்றினார்.
"ஆதாரப்பூர்வமான நபிமொழிகளைத் திரட்டுவதற்கு உங்களில் யார் தயார்?'' என்று அறிஞர் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி தமது மாணவர்களிடம் கேட்டார்.
சிறுவர் புகாரியின் இதயத்தில் அந்த வார்த்தைகள் விழுந்தன. இதோ இப்போது நமது கரங்களில் ஸஹீஹுல் புகாரி எனும் நபிமொழித் தொகுப்பு திகழ்கிறது.
"உமது கையெழுத்து நபிமொழிக் கலை வல்லுனர்களின் கையெழுத்து போன்று உள்ளது'' என்று இமாம் பஸ்ஸார் தமது மாணவர் அத்தஹபியிடம் கூறினார்.
நபிமொழிக் கலையின் மாபெரும் வல்லுனராக மாறினார் இமாம் அத்தஹபி.
இளைஞர் ஷாஃபி கவிதையில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். "கவிதை இருக்கட்டும். சட்டத் துறையில் (ஃபிக்ஹ்) நீர் எங்கே இருக்கிறீர்?'' என்று அவரிடம் கேட்டார் இமாம் முஸ்அப் அஸ்ஸுஹைரி.
இமாம் ஷாஃபி எனும் மாபெரும் சட்டமேதை நமக்குக் கிடைத்தார்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி உண்டு.
மனம் எண்ணத்தின் பிறப்பிடம்.
எண்ணம் வார்த்தையின் தாய்.
வார்த்தை செயலின் உந்து சக்தி.
செயல் மனிதனை இனங்காட்டும் பிம்பம்.
ஆகவே, நல்லதையே பேசுங்கள். இல்லையேல் வாய்மூடி மெளனமாக இருங்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am