
செய்திகள் சிந்தனைகள்
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
உங்களிடம் இல்லாத ஒன்றுக்காக உங்களை யாரேனும் புகழ்ந்தால், அது உங்களுக்கு எப் பயனையும் தராது. அந்தப் புகழ்ச்சி போலியானது, ஏமாந்துவிட வேண்டாம்.
அவ்வாறே.. உங்களிடம் இல்லாத ஒன்றுக்காக உங்களை யாரேனும் இகழ்ந்தாலும் அது உங்களுக்கு எந்தத் தீங்கையும் தராது. தயக்கம் வேண்டாம்; தைரியமாக இருங்கள்.
மனிதன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவனை வெறுப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
நபிமார்களைக்கூட எல்லோரும் நேசிக்கவில்லையே.
மனிதன் எவ்வளவுதான் கெட்டவனாக இருந்தாலும் அவனையும் நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
ஃபிர்அவ்னையும் நம்ரூதையும்கூட நேசித்தவர்கள் இருந்தார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்), "மக்கள் என்னைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?'' என்று முத்ரிஃப் இப்னு அப்துல்லாஹ்விடம் கேட்டபோது,
"நண்பர்கள் உங்களைப் புகழ்கிறார்கள். எதிரிகள் உங்களை விமர்சிக்கிறார்கள்'' என்று பதில் சொன்னார்.
அதற்கு அவர், "மக்கள் அவ்வாறே இருக்கட்டும். மக்கள் அனைவரும் என் விஷயத்தில் கருத்தொற்றுமை கொண்டிருப்பதில் இருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்'' என்றார்.
காரணம், மக்கள் அனைவரும் தம்மைப் புகழ்ந்தால் தற்பெருமை ஏற்பட்டுவிடும் என்றும் அல்லது மக்கள் அனைவரும் தம்மை விமர்சித்தால் அவ்வாறு ஏதேனும் இருந்துவிடுமோ என்றும் அவர் அஞ்சினார்.
நீங்கள் யாரென்று மக்கள் அறிந்து வைத்திருப்பதைவிட நீங்கள் யாரென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
எனவே பிறருடைய புகழ்ச்சியும் இகழ்ச்சியும் உங்களை ஏமாற்ற வேண்டாம்!
இந்தக் கருத்தை அவ்வளவு அழகாக அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்:
"மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருக்கிறான்'' (திருக்குர்ஆன் 75:14)
- மௌலவி நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am