நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை

ஒவ்வொரு நாளும் பலவிதமான வேஷம் போடும் மனிதர் களின் நடுவில்தான் உண்மை முகம் தெரியாமல் நாமும் நகர்ந்து கொண்டிருக்கிறோம். முகத்துக்கு முன்னால் பாசமும் முதுகுக்குப் பின்னால் வேஷமும் போடும் உலகம் இது! 

உண்மையான பாசம் உதாசீனப்படுத்தி ஒதுக்கப் பட்டும் பொய்யான வேஷம் உற்சாகப்படுத்தி வரவேற்கப் படும் கலிகாலம் இது. வெளிப்படையாக இருப்பவர்களை விட வேஷம் போடுபவர்களுக்குத்தான் இங்கே மதிப்பு அதிகம். 

படைத்த இறைவன் ஏற்கனவே எழுதி முடித்து விட்ட நாட கத்துக்குத்தான் நாம் தினமும் போடுகிறோம் புதுப் புது வேஷங்கள்.மனித மனதைக் காட்டும் மாயக் கண்ணாடி மட்டும் நம் கையில் இருந்தால், வேஷம் போட்டு நாடகமாடு வோரின் முகம் வெளிச்சத்தில் சந்தி சிரிக்கும். 

பழகிப்பார் பாசம் தெரியும். விலகிப்பார் வேஷம் புரியும். 
பார்க்கும்.. பழகும் உறவுகள், நட்புகள் எல்லாமே நமது சொந்தம், நட்பு என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள். பழகிப் பாருங்கள். 90% வேஷம்தான். அதனால் சிலரின் வேஷத்தால் பலரின் பாசத்தை மறுக்கிறது நமது மனம். 

பாசமே இல்லாதவங்க கிட்ட பாசம் காட்டினால், பழகிய பாவத்துக்கு வேஷம் வேண்டுமானால் போடுவார்களே தவிர பாசம் கிடைக்காது. விஷம், வேஷம் இரண்டுமே ஒன்றுதான். விஷம் உயிரைக் கொல்கிறது. வேஷம் உறவைக் கொல்கிறது. 

சிலர் கோபப்படுவோரைப் பார்த்து ஏன் இப்படி கோபப்படு கிறாய் என்று கேட்பார்கள். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் : கோபப்படுபவர்களுக்கு ரோஷமும் அதிகம். பாசமும் அதிகம். ஆனால், வேஷம் மட்டும் ஒரு போதும் இருக்கவே இருக்காது. 

சிலர் சமூகத்துக்குப் பயந்து இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டுவார்கள். அப்படி நாமும் வேஷம்  போட ஆரம் பித்தால், நம் வாழ்க்கையை நாம் வாழவே முடியாது. இரட்டை வேடம் போடுபவர்கள் குறித்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) எச்சரித்த பொன்மொழி இது : 

'மனிதர்களிலேயே ஆக மோசமானவன், இரட்டை முகம் (வேடம்) கொண்டவன்தான். அவன் அவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும்  இவர்களிடம் செல்லும் போது இன்னொரு முகத்துடனும் செல்வான்.' [நூல் ஸஹீஹ் முஸ்லிம்] 

▪︎இறுதியாக ஒரேயொரு  வார்த்தை : 

பெயரைக் கேட்ட பிறகும் கூட நமக்கு ஞாபகம் வரக் கூடாது. அந்த அளவுக்கு மறக்கவேண்டும்...உறவு, நட்பு, பாசம் என்ற பெயரில் வேஷம் போடும் சில வேடதாரி களை. 

அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று எத்தனை வேஷம்? எத்தனை அலங்காரம்? எத்தனை தேன் கலந்த பசப்பு வார்த்தை? என்னென்ன புரட்டு, பொய் பித்தலாட்டம்? அத்தனையும்... மண்ணில் புதைந்த பிறகு வெறும் எலும்புக்கூடுதான் மிஞ்சும் என்பது இந்த வேடதாரிகளுக் குத் தெரியாதுபோலும். 

- கே. ஆர். மஹ்ளரீ

தொடர்புடைய செய்திகள்

+ - reset