நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கடவுளுக்கே உபதேசம் கூறுவார் மோடி: ராகுல் விமர்சனம்

சான்டா கிளாரா:

கடவுளைவிட அதிகம் அறிந்தவராக தன்னை நினைக்கும் இந்தியப் பிரதமர் மோடி, அவருக்கே உபதேசம் செய்வார் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஒருவார கால பயணமாக வந்துள்ள ராகுல், கலிஃபோர்னியா மாகாணத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்த உலகம் மிகப் பெரியது; எந்த நபராலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாதபடி சிக்கலானது. ஆனால், தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கும் சிலர் இந்தியாவில் உள்ளனர்.

கடவுளைவிட தாங்கள் அதிகம் அறிந்தவர்கள் என்பது அவர்களின் நினைப்பு. இதுவும் ஒருவகையான நோய்தான்.

வரலாற்றாசிரியர்களுக்கு வரலாற்றையும், அறிவியலாளர்களுக்கு அறிவியலையும், ராணுவத்தினருக்கு போர் வித்தைகளையும் அவர்களால் "விளக்க' முடியும்.

கடவுள் அருகே அமர்ந்து, பூமியில் என்ன நடக்கிறது என்றுகூட அவர்கள் விளக்குவர். இதற்கு, நமது பிரதமரும் ஓர் உதாரணம்தான்.

கடவுள் அருகே மோடி அமர்ந்தால், பூமி எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து கடவுளுக்கு அவர் விளக்குவார். தனது படைப்புகள் குறித்து கடவுளே குழம்பிவிடுவார்.

இந்தியாவில் அனைத்து நிர்வாக அமைப்புகளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மக்களை அச்சுறுத்தும் அரசாக பாஜக அரசு செயல்படுகிறது. அனைத்து அரசு அமைப்புகளும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset