நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிறு, நடுத்தர, மைக்ரோ, நிறுவன மாநாட்டில் 500 பேராளர்கள்: நிவாஸ் ராகவன்

கோலாலம்பூர்:

சிறு, நடுத்தர, மைக்ரோ, நிறுவனங்களுக்கான மாநாட்டில் 500 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்தியர் வர்த்தகர் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த மாநாடு வரும் ஜூன் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தலைநகர் மெனாரா மிட்டியில் நடைபெறவுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு பின் இந்த தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் அடிப்படையின் அரசாங்க மானியம், கடனுதவி திட்டங்கள் அவர்களுக்கு முறையாக சென்று சேர வேண்டும்.

இதனை இலக்காக கொண்டே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

எஸ்எம்இ வங்கி, மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதி, தெக்குன், எஸ்எம்இ கோர்ப் மலேசியா, மலேசியா டிஜிட்டல் கோர்ப், பேங்க் சிம்பானான் நேஷனல், அக்ரோ வங்கி ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் வர்த்தகர்கள் முன்கூட்டியே தங்களின் வருகையை உறுதி செய்துக்  கொள்ள வேண்டும்.

இம்மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு www.klsicci.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் என நிவாஸ் ராகவன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset