செய்திகள் விளையாட்டு
உலகில் கால்பந்து மையமாக உருவெடுக்க சவூதி அரேபியா தயார்: ஜான் அலெஸ்லி
ரியாத்:
உலகில் கால்பந்து மையமாக உருவெடுக்க சவூதி அரேபியா தயார் என்று உலக கால்பந்து உச்ச மாநாட்டின் ஆசிய நிறுவனர் ஜான் அலெஸ்லி கூறினார்.
உலக கால்பந்து உச்ச நிலை மாநாடு வரும் டிசம்பர் மாதம் சவூதி அரேபியா ரியாத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 1,500க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
உலக கால்பந்துத் துறையின் மேம்பாட்டிற்கு மிகப் பெரிய பங்கை இந்த மாநாடு வழங்கும் என்று அம்மாநாட்டின் அறிமுக விழாவில் ஜான் அலெஸ்லி கூறினார்.
கால்பந்து வளர்ச்சி, உருமாற்றத்திற்குச் சவூதி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிரபல கிளப்புகள், லீக்குகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த மாநாடு ஃபிஃபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.
150க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் 100க்கும் மேற்ப்பட்ட அனைத்துலக ஊடக பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் மூலம் இம்மாநாட்டின் செய்திகள் அனைத்துலக ரீதியில் கொண்டு சேர்க்கப்படும்.
இரண்டு நாட்கள் கொண்ட இம்மாநாட்டில் கால்பந்து மேம்பாடு, வர்த்தக தொடர்புகள், அனுபவ பகிர்வுகளும் இடம்பெறவுள்ளது.
சவூதி அஜ்லன் அண்ட் ஹோல்டிங் தனது துணை நிறுவனமான சாத் எண்டர்டேய்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து மை இவெண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இம்மாநாட்டை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது என்று ஜான் அலெஸ்லி கூறினார்.
2027ஆம் ஆண்டு ஏஎப்சி ஆசியக் கிண்ணம், பிபா உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளை ஏற்று நடத்தும் முயற்சிகளில் சவூதி அரேபியா அரசாங்கம் உள்ளது.
இதன் உச்சக்கட்டமாக தான் உலகின் பிரபலமாக கிறிஸ்டியானோ ரொனால்டோவை சவூதி அரேபியா கவர்ந்ததுடன் அவர் தற்போது அந்நாட்டு கிளப்பில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 11:45 pm
சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மலேசிய ஆண்கள் கபடி அணி வரலாறு படைத்தது
December 18, 2025, 8:48 pm
சீ விளையாட்டு போட்டியில் மலேசியா 200 பதக்க இலக்கை அடைந்தது
December 17, 2025, 3:15 pm
சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரையும் ஏலத்தில் எடுத்த சி எஸ் கே
December 17, 2025, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை பிபா 245 ரிங்கிட்டாகக் குறைத்துள்ளது
December 17, 2025, 10:17 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்தில் செல்சி
December 16, 2025, 4:50 pm
லியோனல் மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்
December 16, 2025, 11:09 am
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் வருடாந்திர விருந்துபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
December 16, 2025, 8:38 am
மீண்டும் இந்தியா வருவேன்: லியோனல் மெஸ்ஸி
December 16, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
December 15, 2025, 4:24 pm
