நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லீ ஷீ ஜியாவின் தோல்வி உடல் நலக் குறைவே முக்கிய காரணம்

கோலாலம்பூர்:

தேசிய பூப்பந்து வீரர் லீ ஷீ ஜியாவின் தோல்விக்கு அவருக்கு ஏற்ப்பட்ட உடல்நலக்குறைவே காரணம் என்று அவரின் நிர்வாகி கூறினார்.

மலேசியா மாஸ்டர் பூப்பந்துப் போட்டி புக்கிட் ஜாலில் அக்ஸிதா அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதன் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மலேசியாவில் லீ ஷீ ஜியா, தைவானின் லின் சுன் யியை எதிர்த்து களமிறங்கினார்.

1 மணி நேரம் 24 நிமிடங்களுக்கு நடைபெற்ற இந்த போட்டியில் லீ ஷீ ஜியா 19-21, 21-16, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார்.

லீ ஷீ  ஜியாவின் இந்த தோல்விக்கு உடல் நலக் குறைவே முக்கிய காரணமாக உள்ளது.

போட்டியின் போது அவரால் நிற்கக் கூட முடியவில்லை. இதனால் பல முறை களத்தில் இருந்து அவர் வெளியேறினார் என்று அவரின் நிர்வாகி கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset