நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீ போட்டி வீழ்ச்சிக்கு அரசியல் நிலைத்தன்மையை காரணம் காட்டாதீர்: அமைச்சர் ஹன்னா இயோவிற்கு அஹ்மத் பைசல் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

சீ போட்டி வீழ்ச்சிக்கு அரசியல் நிலைத் தனமையை காரணம் காட்டுவதை முதலில் நிறுத்துங்கள் என்று முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபைசல் அசுமு எச்சரித்தார்.

நிலையில்லாத அரசியல், அமைச்சர்களின் மாற்றங்கள் ஆகியவற்றால் 220 விளையாட்டாளர்கள் முறையாகப் பயிற்சிகளை தொடர முடியவில்லை என தற்போதைய அமைச்சர் ஹன்னா இயோ கூறியுள்ளார்.

அவரது இந்த கூற்றை நான் கடுமையாக எதிர்க்கிறேன். காரணம் நான் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் தான் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு போடியம் திட்டத்திற்கு நிதி கோரப்பட்டது.

அக் காலக்கட்டத்தில் போடியம் திட்டத்திற்காக எந்தவொரு சிறப்பு நிதியும் இல்லை.

இருந்த போதிலும் அந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.

இதனால்,போடியம் திட்டத்திற்கு நிதி கோரி இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு அமைச்சரவையில் மனு சமர்பித்தது.

இதன் பலனாக 2022 முதல் 2025ஆம் ஆண்டு வரை போடியம் பயிற்சித் திட்டத்திற்காக 240 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியது.

ஆகவே, இந்த விவகாரத்தில் அரசியல் நிலத்தன்மையை ஹன்னா சாக்காகப் பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அஹ்மத் ஃபைசல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset