நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிலிப்பைன்ஸ் கடலில் பெரும் விபத்து: பயணிகள் கப்பல் மூழ்கியது

மணிலா:

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று காலை 342 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு ஃபெர்ரி கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 

பசிலான் அவசர உதவி அதிகாரி, ரொனாலின் பெரெஸ், குறைந்தது 138 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ‘AFP’ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மேலும், 18 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போதிய பணியாளர்கள் இல்லாததால் சிகிச்சை வழங்குவதில் சவால்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

விபத்து நடந்தபோது அந்த ஃபெர்ரி, ஜம்போங்கா நகரிலிருந்து ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை, தெற்கு மின்டானாவோவில் தங்கள் நிலையங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset