செய்திகள் மலேசியா
மூன்று வயது சிறுமியின் கொலை முயற்சி வழக்கு: தந்தைக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
கோத்தா பாரு:
தனது மூன்று வயது மகளைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டில், 24 வயதுடைய முஹம்மத் ஹைரல் ஹுசைரி ஹஸ்மி என்பவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
நீதிபதி சுல்கிஃப்லி அப்துல்லாஹ் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றம் ஏதும் செய்யவில்லை என மறுத்து விசாரணை கோரினார்.
இந்த சம்பவம், ஜனவரி 14, 2026 அன்று காலை 7 மணியளவில், பாசிர் பூத்தே அருகிலுள்ள கடற்படை துறைமுகம் பக்கத்தில், ஜாலான் பாக் மாயோங் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
வழக்குத் தொடர்ச்சியை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் சித்தி ஹஜர் மஸ்லான் மேற்கொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை வழக்கறிஞர் முஹம்மது சுல்பகர் அல் பாசிசியார் பிரதிநிதித்துவம் செய்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை. அடுத்த விசாரணை தேதி பிப்ரவரி 25 என நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 11:14 pm
பிலிப்பைன்ஸ் கடலில் பெரும் விபத்து: பயணிகள் கப்பல் மூழ்கியது
January 26, 2026, 10:52 pm
பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா ஆகம முறைப்படி நடைபெற வேண்டும்; மதுபான விற்பனைக்குத் தடை: சிவநேசன்
January 26, 2026, 10:44 pm
இளையோர் பாதுகாப்புக்கு புதிய சட்டம்: சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு 16 வயது வரம்பு நிர்ணயம்
January 26, 2026, 9:27 pm
வீணடிக்கப்பட்ட, திருடப்பட்ட கூடுதல் நிதியை திரும்பப் பெற முடியும்: பிரதமர் நம்பிக்கை
January 26, 2026, 7:05 pm
B40 குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: துணைக் கல்வி அமைச்சர் பெனடிக்டைன்
January 26, 2026, 7:00 pm
பெட்ரோல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்டதாக வைரலான காணொலி: இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
January 26, 2026, 4:16 pm
டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் நிலை குறித்து வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும்: தக்கியூடின்
January 26, 2026, 4:15 pm
