நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

B40 குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: துணைக் கல்வி அமைச்சர் பெனடிக்டைன்

கோலாலம்பூர்:

குறைந்த வருமானம் கொண்ட B40 குடும்பங்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து இலவச ஆரம்பக் கல்வி வழங்க அரசாங்கம் எடுத்த முடிவு, பெற்றோரின் நிதிச்சுமையை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்த முயற்சி, சமூக-பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான ஆரம்பக் கல்வி வாய்ப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சின் உறுதியை பிரதிபலிக்கிறது என்று துணைக் கல்வி அமைச்சர் பெனடிக்டைன் வோங் கா ஓ கூறினார். 

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொடக்க வகுப்புகளில் B40 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.

கல்வி தொடக்க நிலையிலேயே இடைவெளி ஏற்படாமல் தடுப்பதே இதன் நோக்கம் என அவர் விளக்கினார்.

2026-ஆம் ஆண்டில் 350 வகுப்புகளை திறக்க அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 6,469 கல்வி நிறுவனங்களில் 10,514 ஆரம்பப் பள்ளி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2,14,122 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம், B40 பெற்றோருக்கு நிதிச்சுமையை குறைப்பதுடன், குழந்தைகள் தரமான சூழலில் கல்வியைத் தொடங்க உதவும் முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset