நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா ஆகம முறைப்படி நடைபெற வேண்டும்; மதுபான விற்பனைக்குத் தடை: சிவநேசன்

ஈப்போ:

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா ஆகம முறைப்படி நடைபெற வேண்டும்.

மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் கூறினார்.

பேரா மாநிலத்தில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா கொண்டாட்டப்படுகிறது. 

அதில் பிரதான ஆலயமாக ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்  விளங்குகிறது.

இந்த ஆண்டும் தைப்பூசத்தன்று காவடிகள் சுமந்து செல்லும் வழிகளில் உள்ள கடைகளிலும்,  மக்கள் கூடும் கடை பகுதிகளிலும்  மது பானங்கள் விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த விதி 3 நாட்களுக்கு தொடரும். 

மது பானங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு தடைவிதிக்க வலியுறுத்தப்படும் அறிக்கைகளை  ஊராட்சி மன்றங்கள்  வழங்கும் என்று அவர் கூறினார்.

தைப்பூசத்துன்று வழக்கத்திற்கு மாறாக ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் அதிகமான பக்தர்கள்  கூடுவதால்  பாதுகாப்பு அம்சங்களுக்கு போலீசார் முக்கியத்துவம் வழங்குவர். அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம. 

அதே வேளையில் ஆலயங்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைபடுபவர்களுக்கு மருத்துவர்களும் ஆலய வளாகத்தில் பணியில் ஈடுபடுவர்.

ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் அதிகமான நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.  உடன் அழைத்து வரும் பிள்ளைகளை முறையே கண்காணிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

மேலும் புந்தோங்கில் இருந்து கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியத்திற்கு  செல்ல  ஜாலான் துன் ரசாக்  சாலையில் உள்ள  பிரதான பாலம் தற்காலிகமாக திறந்துவிடப்படும் என்று டத்தோ சிவநேசன் மறு உறுதிப்படுத்தினார்

அந்த பாலத்தின் நிர்மாணிப்பு பணி இன்னும் நிறைவு பெறவில்லை இருந்தபோதும் தைப்பூசத்தை முன்னிட்டு  ஈப்போ உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து  பால் குடம், காவடிகள் எந்திச் கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு  செல்லும் பக்தர்களுக்கு பாலத்தின் ஒரு பகுதி திறந்துவிடப்படும் அன்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset