நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்டதாக வைரலான காணொலி: இருவரை போலீசார் தேடி வருகின்றனர்

காஜாங்:

இங்கு தாமான் சுங்கை சுவா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தின் முன், சமீபத்தில் மோதலில் ஈடுபட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய இரண்டு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் நேற்று இரவு 11.16 மணியளவில் காவல்  துறைக்குக் கிடைத்ததாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

“ஆரம்பக்கட்ட விசாரணையில், நேற்று மதியம் 12.50 மணியளவில் பொது இடத்தில் இரண்டு ஆண்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் வீடியோ பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

“இதுவரை, சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் எந்தவொரு புகாரையும் அளிக்கவில்லை. சம்பவத்திற்கான உண்மையானக் காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

மேலும், சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் காஜாங் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தின் 03-8911 4243 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, அல்லது விசாரணை அதிகாரி சர்ஜன் முஹம்மது நஜீப் முஹம்மது ராட்காலி (012-342 9297) என்பவரை தொடர்புகொள்வதன் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset