செய்திகள் உலகம்
லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்
லண்டன் :
கோஹினூர் வைரம் உலகின் விலை மதிப்பற்ற வைரங்களில் ஒன்றாகும். இந்தக் கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதன் எடை 105.6 கேரட் ஆகும்.
இந்த வைரத்தை பத்திரமாக காத்து வந்தவர்கள் முகலாயர்கள்.
ஔரங்கசீப் காலத்தில் பிறந்த முஹம்மது ஷா, ஈரானிய மன்னர் நாதிர் ஷாவிடம் பறிகொடுத்தார்.
இந்த வைரத்தைச் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் இறிதியில் வைத்திருந்தார் என்றும், அவரிடமிருந்து வெள்ளையர்கள் பறித்து விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகளனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த வைரத்தைத் திரும்பத் தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது.
இந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்தார்.
ஆனால், இந்த வைரத்தை இந்தியா சொந்தம் கொண்டாடுவது உள்பட பல்வேறு சர்ச்சைகள் உள்ளதால், இது பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிவதை இங்கிலாந்து ராணி கமீலா பார்க்கர் தவிர்த்து விட்டார்.
அவர் அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் அணிந்தார். இருப்பினும் இந்த வைரம், இங்கிலாந்து அரசின் சொத்தாகத்தான் இருக்கிறது.
லண்டன் நகரில் உள்ள லண்டன் டவரில் இன்று தொடங்கி வருகின்ற நவம்பர் மாதம் வரை நடைபெறுகின்ற புதிய ஆபரணக் கண்காட்சியில் இந்த வைரம் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
கோஹினூர் வைரம் மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆபரணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இந்தப் புதிய ஜூவல் ஹவுஸ் கண்காட்சியைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த ஆபரணக் கண்காட்சி, வரலாற்றை முன் எப்போதையும் விட விரிவாக ஆராய்கிறது என லண்டன் டவரின் உறைவிட கவர்னர் ஆண்ட்ரூ ஜாக்சன் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
