நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இம்ரான் கட்சியை தடை செய்ய திட்டம்

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்இன்சாஃப் கட்சியினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அந்தக் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவத்துக்குச் சொந்தமான இடங்களிலும், பிற பொது இடங்களிலும் அவரது கட்சியினர் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதல்களை இம்ரான் கான் இதுவரை கண்டிக்கவில்லை. ராணுவத்தை அவர் தனது எதிரியாகக் கருதி வருகிறார்.
இதனால் அவரது கட்சியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.

அதற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஜாமீன் பெறுவதற்காக அவர் கடந்த 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்த அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகளும், துணை ராணுவப் படையினரும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் வன்முறை வெடித்தது. பின்னர் இம்ரான் கானை உச்சநீதிமன்றம்  விடுவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset