
செய்திகள் வணிகம்
மலேசிய நாணயம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது: ப்ளூம்பெர்க்கின் கணிப்பு
கோலாலம்பூர்:
மலேசிய நாணயம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது என்று சீனா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிரான மலேசிய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 4.59-ஆக சரிந்துள்ளது.
சிங்கப்பூர் டாலருக்கான மலேசியா நாணய மதிப்பு தற்போது 3.41 ரிங்கிட்டாக வீழ்ந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் மலேசிய நாணயம் வலுவிழந்து வருகிறது. சில காலமாக நாட்டிற்குள் இலாப நோக்கற்ற தன்மையாலும் வெளிநாட்டு நிச்சயமற்ற தன்மையினாலும் மலேசிய நாணயம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இன்று சிங்கப்பூர் டாலருக்கு எதிரான மலேசிய நாணயத்தின் மாற்று விகிதம் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
மலேசிய ரிங்கிட் அமெரிக்க டாலருக்கான நாணயமாற்று மாற்று விகிதம் 4.59-ஆக இருக்கும்போது, சிங்கப்பூர் டாலருக்கான மலேசியாவின் மாற்று விகிதம் தற்போது ரி.ம 3.41-ஐ எட்டியுள்ளது ஓர் அதிர்ச்சியான செய்தியாகும்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை, சந்தையில் நாணய விகிதம் 3.3829 ஐ எட்டியது. அது நேற்றும் குறைந்தது. இன்று மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
மலேசியா ரிங்கிட், சிங்கப்பூர் டாலருடன் ஒப்பிடுகையில் 0.19% குறைந்துள்ளது. இது மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான பிரிவினைக்குப் பிறகு மிகக் குறைவாக பதிவாகி இருப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவிக்கின்றது.
சீனா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், சிங்கப்பூர் டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் சரிவு மாதக்கணக்கில் குறைந்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am